ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரஜினி முருகன்' படத்தை “ஏப்ரல் 25 முதல் பார்வை, ஜுன் 7 இசை வெளியீடு, ஜுலை 17 பட வெளியீடு” என மார்ச் மாதம் 20ம் தேதியே அறிவித்தார்கள். ஆனால் ஜுன் 7ம் தேதி வெளியிடுவதாகச் சொன்ன இசையை ஜுன் 16ம் தேதிதான் வெளியிட்டார்கள். அதற்கு முன்னதாக மே 29ம் தேதி சிங்கப்பூரில் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' சிங்கிள் டிராக்கை வெளியிட்டார்கள். அடுத்து ஜுலை 17ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். அதற்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் இதுவரை அன்றைய தேதியில் படம் வெளியாகுமா இல்லையா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத் தயாரிப்பாளர் லிங்குசாமி என்ன நடந்தாலும் 'ரஜினி முருகன்' படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவேன் என சபதம் ஏற்காத குறையாக ஆணித்தரமாக அறிவித்தார். இப்போதே படம் எப்போது வரும் என்ற தகவலை சம்பந்தப்பட்ட யாருமே வாயைத் திறந்து சொல்லாமலே இருக்கிறார்கள். குறுகிய காலத்தில் கிடுகிடுவென வளர்ந்த வந்த சிவகார்த்திகேயன் 'ரஜினி முருகன்' படத்தில் நடித்துக் கொடுத்து சிக்கிக் கொண்டார் என்றே சொல்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் எந்த வெளியீட்டைப் பற்றியும் எப்போதுமே முன்னரே அறிவிக்க மாட்டார்கள். எப்படியும் அறிவிப்பது போல நடக்காது என்று அனைவருக்குமே தெரியும். ஆனால், இந்த தேதியில் முதல் பார்வை, இந்த தேதியில் இசை, இந்த தேதியில் வெளியீடு என அறிவிக்கப்பட்ட 'ரஜினி முருகன்' படத்தின் முதல் பார்வையைத் தவிர மற்ற எதுவுமே சொன்னபடி முறையாக நடக்காமலே தள்ளிப் போகிறது. அவர்கள் பாடலைப் போலவே 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா....' என்றே கேட்கத் தோன்றுகிறது.