Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பாகுபலி' - எதிர்பார்ப்பு எப்படி ?

07 ஜூலை, 2015 - 10:21 IST
எழுத்தின் அளவு:
How-was-Bahubali-expectation

'நான் ஈ' என்ற ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்து தமிழ் ரசிகர்களிடம் அதிகமாக அறிமுகமான இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் 200 கோடி ரூபாய் அளவில் தயாரிக்கப்பட்டுள்ள 'பாகுபலி' படத்திற்கு தமிழில் எதிர்பார்ப்பு எப்படி உள்ளது ?. சரித்திரக்காலப் படம், தமிழ் நடிகர்கள், பிரம்மாண்டமான அரங்குகள், அசர வைக்கும் எஃபெக்ட்ஸ் காட்சிகள் என அனைத்தும் இருந்தாலும் படத்தில் நாயகனாக தெலுங்கு நடிகர் பிரபாஸ், வில்லன் நடிகர் ராணா நடித்திருப்பது தமிழில் மிகப் பெரும் மைனஸாக இருக்கிறது என வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் என்னதான் தமிழ் பேசி நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு அதிக அறிமுகமில்லாத அவர்களால் இங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றே கருதுகிறார்கள்.


அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் ஆகியோர் மட்டுமே படத்தில் தெரிந்த முகங்கள். இவர்கள் நடித்திருப்பதால்தான் இந்தப் படத்தினை தமிழிலும் ஓரளவிற்கு வியாபாரம் செய்ய முடிகிறது என்கிறார்கள். ஐதராபாத்தில் 40 திரையரங்குகளிலும், பெங்களூருவில் 25 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிபவர்களால் சென்னையில் வெறும் 13 திரையரங்குகளில் மட்டுமே வெளியிட முடிவதை வைத்து இந்தப் படத்திற்கு தமிழில் எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள். வெளியூர்களிலும் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்றே சொல்கிறார்கள்.


நேற்று 'பாகுபலி' தமிழ் டிரைலர் 2 என்று ஒன்றை யுடியூபில் வெளியிட்டுள்ளார்கள். ஆனால், அதில் கடைசியில் வரும் எழுத்துக்களைத் தவிர வேறு எதிலுமே தமிழ் இல்லை. ஒரு வசனம் கூட தமிழில் இல்லாத டிரைலருக்கு தமிழ் டிரைலர் என வேறு தலைப்பு வைத்திருக்கிறார்கள். தெலுங்கில் டிக்கெட்டு விலையே 5000 ரூபாய் வரை போகும் ஒரு பிரம்மாண்டப் படத்தை தமிழில் மிகப் பெரும் அளவில் மார்க்கெட் செய்யவில்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in