தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
படத்தை ஓட வைக்க கன்னாபின்னா பப்ளிசிட்டிகளில் இறங்கிவிட்டனர். 'டார்லிங்' படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. இப்படத்தில் வரும் ஒரு முத்தக்காட்சியை எடுக்கும்போது ஜி.வி.பிரகாஷ் குமார் 36 'டேக்'குகள் வாங்கியதாக கடந்த சில தினங்களாக பரபரப்பான செய்திகள் பரப்பப்பட்டன. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
அப்போது விழாவை தொகுத்து வழங்ககிய தொகுப்பாளினி,“ இப்படத்தில் வரும் ஒரு முத்தக்காட்சி எடுக்கும்போது 36 'டேக்'குகள் வாங்கியதாக செய்திகள் வந்திருக்கிறதே?' என்று ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஜி.வி. பிரகாஷ் ''அந்த முத்தக் காட்சிக்கும், அவ்வளவு 'டேக்'குக்கும் நான் பொறுப்பல்ல, அதை நீங்கள் இயக்குனரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்'' என்று நழுவி ஓடினார்.
இதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் அதிக் ரவிச்சந்திரன், ''அந்த முத்தக்காட்சி எடுக்கும்போது கிட்டத்தட்ட36 'டேக்'குகள் வாங்கியது உண்மைதான்! ஆனால் முத்தம் கொடுப்பது மாதிரி எடுக்க 36 டேக் வாங்கியது என்பதில் உண்மையில்லை! அந்த முத்தக் காட்சியுடன் ஒட்டி வரும் சில காட்சிகளையும் சேர்த்து எடுக்கத்தான் அவ்வளவு 'டேக்'குகள் வாங்கியது'' என்று விளக்கம் கொடுத்தார்.