வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கங்காரு படத்தில் தங்கை வேடத்தில் நடித்தவர் ஸ்ரீ பிரியங்கா. அக்மார்க் தமிழ்நாட்டு பெண்ணான இவரும் எல்லா தமிழ் நடிகைகளையும் போலவே, நான் லிமிட் தாண்ட மாட்டேன். காரணம் ஓவர் கிளாமர் என் உடம்புக்கு ஆகாது என்றுதான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறார். அதற்கேற்ப தற்போது வந்தா மல, சாரல் படங்களிலும் நடித்திருக்கிறார். இதில் வந்தாமல படத்தில் சென்னைத்தமிழ் பேசி அதிரடியான கதாநாயகியாக நடித்து அசத்தியிருக்கிறார். ஆனால், சாரல் படத்தில் மைனாவில் அமலாபால் நடித்தது போன்று ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். ஆக, இந்த இரண்டு படங்களுமே காதல் கதைகளில் உருவாகி தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டன. இந்த படங்களைத் தொடர்ந்து மேல்தட்டு ஹீரோக்களுக்கு ஜோடியாக வேண்டும் என்று ஆசைப்படும் பிரியங்கா, கதைகளைப்பொறுத்து கிளாமராக நடிக்கும் முடிவுக்கு வந்து விட்டார். அதேசமயம், கிளாமர் ஒருபோதும் வல்கர் ஆகாத அளவுக்கு கவனமாக செயல்படுவேன் என்றும் கூறுகிறார்.