சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் மீனா. ஆரம்பத்தில் ஹோம்லியான வேடங்களிலேயே நடித்தபோதும் பிரபுதேவாவுடன் இணைந்த நாம் இருவர் நமக்கு இருவர் படத்திலிருந்து கவர்ச்சி உடைதரித்தும் கலக்கத் தொடங்கினார். அதனால் அதுவரை குடும்பப்பாங்கான கதைகளுக்கு மட்டுமே மீனா பொருந்துவார் என்றிருந்த நிலை மாறி அதன்பிறகு மாடர்ன் நடிகையாகவும் ஒரு பெரிய ரவுண்டு வந்தார் மீனா. அந்த சமயத்தில் கமலுடன் அவ்வை சண்முகி போன்ற படங்களிலும் நடித்தார். இந்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி நடித்து வரும் மீனாவுக்கு மீண்டும் ரஜினி மற்றும் கமலுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், த்ரிஷ்யம் படத்தின் மலையாள, தெலுங்கு பதிப்புகளில் நாயகியாக நடித்த மீனா, தமிழில் கமல் பாபநாசம் என்ற பெயரில் த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கயிருந்தபோது அவரது ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தனக்கே கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தாராம்.