ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாடலாசிரியர் பா.விஜய் தயாரித்து இயக்கி, நடிக்கும் படம் ஸ்ட்ராபெரி. அவ்னிமோடி ஹீரோயினாக நடிக்கிறார். சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.
படத்தின் கதை இதுதான். பா.விஜய் ஒரு கால்டாக்சி டிரைவர், ஹீரோயின் அவ்னி மோடி பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு ஆய்வாளர். ஒரு நாள் பா.விஜய்யின் கால் டாக்சியில் பயணம் செய்யும் அவ்னிமோடி பா.விஜய்யின் சில வித்தியாசமான நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கிறார். அவருக்குள் ஒரு பேய் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அதைப் பற்றி ஆராய முயற்சிக்கிறார். நேரடியா சென்று உங்களுக்குள் பேய் இருக்கிறது என்றால் அவர் நம்ப மாட்டார். இதனால் அடிக்கடி கால் டாக்சியில் பயணம் செய்து பா.விஜய்யை காதலிக்கிற மாதிரி நடிக்க ஆரம்பிக்கிறார். பின்பு நிஜமாகவே காதலிக்கிறார்.
அவ்னியை பற்றி தெரிந்து கொள்ளும் பா.விஜய்குள் இருக்கும் பேய் இருவரையும் பிரிக்க வேலை செய்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி அவர் பேயை தன் கைக்குள் கொண்டு வருகிறார். அந்த பேயின் பிளாஷ்பேக் மிகவும் சோகமானது. ஒரு காதல் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்ட காதல் தம்பதிகளின் ஆண்தான் பேயாக பா.விஜய்க்குள் இருக்கிறது. தன் காதலுக்கு எதிரி சமுத்திரகனிதான் என்பதை அறிந்து பா.விஜய் மூலம் சமுத்திரகனியை பழிவாங்க நினைக்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது அடுத்து வரும் பரபர திரைக்கதை. இதில் 20 சதவிகிதம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. தாஜ்நூரின் இசையில் 5 பாடல்கள் இடம்பெறுகிறது.