ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது வருகிற எல்லா படங்களிலும் இடம் பிடித்து விடுகிறார் யோகி பாபு. குண்டான, முரட்டுத்தனமான உடம்பு. அப்பாவியான முகம், சுருட்டையான தலைமுடி, என வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் யோகி பாபு சினிமாவுக்கு வந்த கதையே தனி.
அப்பா ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் பாபுவுக்கும் ராணுவத்தில் சேர ஆசை. இதற்காக ஜிம்முக்கு போய் உடம்பை சிக்கென்று வைத்திருந்தார். ஒரு முறை லொள்ளுசபா ஷ¨ட்டிங்கை வேடிக்கை பார்க்க சென்றவரை பிடித்து நடிக்க வைத்துவிட்டார்கள். அப்போது வந்தது நடிப்பு ஆசை. ராணுவ ஆசையை விலக்கி வைத்து விட்டு நடிப்பு சான்ஸ் தேடினார். வில்லனுக்கு அடியாள் வேடங்கள் கிடைத்தது. அமீர் நடித்த யோகி படத்தில் அவருக்கு அடியாளாக நடித்தது நல்ல பெயரைக் கொடுத்தது. அதிலிருந்த யோகி பாபு ஆனார்.