இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான, சல்மான் கான், 49, இப்போதைக்கு திருமணம் இல்லை என்றும், காதலில் தான் ஆர்வம் உள்ளதாகவும் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மும்பையில், சில ஆண்டுகளுக்கு முன், குடிபோதையில் காரை வேகமாக ஓட்டிச் சென்று, நடைபாதையில் படுத்திருந்தவரை கொன்ற வழக்கில் சிக்கியுள்ள சல்மான் கான், சில மாதங்களுக்கு முன், சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ளார்.பல படங்களில் நடித்து வரும் அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:பெற்றோர் சம்மதத்துடன், அவர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தான். எனினும், இப்போதைக்கு திருமணம் இல்லை. காதலில் தான் மனம் ஆர்வமாக உள்ளது. நான் எதிர்பார்க்கும் குணங்களுடன் பெண் கிடைக்கவில்லை என்று கூற முடியாது. இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். ஆனால், காதல் கட்டாயம் உண்டு.இவ்வாறு, அவர் கூறினார். நடிகர் சல்மான் கான், பல முன்னணி நடிகையருடன் அவ்வப்போது இணைத்து பேசப்படுவது வழக்கம். ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப் என, இவரின் முன்னாள் காதலிகள் பட்டியல் மிக நீளம் என, ரசிகர்கள் கூறுகின்றனர்.