ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாதவன், கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான "தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்" படம், ரூ. 150 கோடி வசூல் என்ற நிலையை கடந்துள்ள நிலையில் ரூ. 160 கோடி வசூல் என்ற சாதனை இலக்கை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படம், ரூ. 160 கோடி என்ற நிலையை எட்டுமானால், லைப்டைம் வசூல் சாதனையாக கருதப்படும் என்ப்து குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டின் முதல் பாதி, பாலிவுட் திரையுலகிற்கு ஏற்றமிகு பகுதியாகவே அமைந்துள்ளது. ஏனெனில், தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படம் ரூ. 160 கோடி வசூல் என்ற சாதனையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், வருண் தவான் மற்றும் ஸ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான "ஏபிசிடி 2" படம், வெளியான குறுகிய நாட்களிலேயே ரூ. 98 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம், இப்படமும், 100 கோடி கிளப் பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.