Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசன், மோகன்லால் ஒப்பீடு தேவையா ?

05 ஜூலை, 2015 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Comparison-between-Kamalhassan-and-Mohanlal-is-needed?

பாபநாசம் படம் வெளிவந்து பலர் அதைப் பார்த்ததுமே கமல்ஹாசனையும், மோகன்லாலையும் ஒப்பீடு செய்து பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஒரு படத்தை ரீமேக் செய்யும் போது அந்தப் படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களை விட படத்தின் கதாநாயகனை மட்டும் ஒப்பீடு செய்வது தேவையற்ற ஒன்றாகவே இருக்கிறது. மோகன்லால் மலையாளத்தில் சிறந்த நடிகர்தான், அதற்காக கமல்ஹாசனை தமிழில் சிறந்த நடிகர் என்று ஒத்துக் கொள்ள மாட்டார்களா என்ன ?. சில இயக்குனர்களே கமல்ஹாசனையும் மோகன்லாலையும் ஒப்பீடு செய்து அவர்களுடைய குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.


பிரபல இயக்குனரான மகேந்திரனின் மகன் ஜான், அவருடைய ஃபேஸ்புக் வலைத்தளத்தில் நேற்று பாபநாசம் பார்த்தேன், பாதி தலைப்பிலேயே விமர்சனம் இருக்கிறது,” என எழுதியுள்ளார். இவர்களைப் போன்ற இயக்குனர்கள்தான் மலையாளப் படத்தையும், தமிழ்ப் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து தங்களது ரசனைகளையும், மேதாவித்தனத்தையும் காட்டிக் கொள்வார்கள். ஆனால், பெரும்பாலான தமிழ் ரசிகர்கள் மலையாளப் படத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு பாபநாசம் படமும், கமல்ஹாசனின் நடிப்பும் நிச்சயம் புது அனுபவத்தைத் தரும்.


கமல்ஹாசனை விமர்சிப்பதை மட்டும் எப்போதும் பலர் விரும்புவார்கள். இதே மோகன்லால் நடித்து தமிழில் ரீமேக்கான சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பையும், கிரீடம் படத்தில் அஜித்தின் நடிப்பையும் யாரும் இந்த அளவிற்கு விமர்சித்திருக்க மாட்டார்கள். காரணம், அவர்களுடைய ரசிகர்கள் அப்படி விமர்சிப்பவர்களை பதிலுக்கு விமர்சித்து அவர்கள் வாயை அடைத்துவிடுவார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளைக் கொண்டு வரும் கமல்ஹாசனை விமர்சிப்பதை மட்டும் பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என கமல்ஹாசனின் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in