Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயப்பிரதாவை முந்திய ஜெயசுதா

05 ஜூலை, 2015 - 09:34 IST
எழுத்தின் அளவு:
Jeyasudha-beats-Jeyapradha-for-launching-his-son-in-cinema-industry

தமிழ்த் திரையுலகில் 70களின் கடைசியில் ஜெயப்பிரதா, ஜெயசுதா என இந்த இரண்டு 'ஜெய' நடிகைகளும் தொடர்ந்து ஜெயத்தைக் குவித்து வந்தனர். அதன் பின் இங்கிருந்து அப்படியே தெலுங்குப் பக்கம் போய் அங்கும் முன்னணி ஹீரோயின்களாக வலம் வந்தனர். பல முன்னணி ஹீரோக்களுடன் இருவருமே ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளனர்.


இவர்களிருவருமே அவரவர் மகன்களை ஹீரோக்களாக அறிமுகப்படுத்துகின்றனர். ஜெயப்பிரதா மகன் சித்து நாயகனாக நடிக்கும் 'உயிரே உயிரே' படம் இனிமேல்தான் வர உள்ளது. ஆனால், ஜெயசுதா மகன் ஸ்ரேயன் நாயகனாக நடித்துள்ள 'பாஸ்தி' தெலுங்குத் திரைப்படம் ஜுலை 3ம் தேதி வெளியாகிவிட்டது. மகனை அறிமுகப்படுத்துவதில் ஜெயப்பிரதாவை, ஜெயசுதா முந்திவிட்டார். தன் மகனை தமிழ்ப் படத்தில்தான் அறிமுகப்படுத்த வேண்டும் என நான் இருந்தேன் என 'உயிரே உயிரே' படத்தின் இசை வெளியீட்டிலேயே ஜெயப்பிரதா தெரிவித்திருந்தார்.


ஜெயசுதா மகன் ஸ்ரேயன் அறிமுகமான 'பாஸ்தி' திரைப்படம் ஓரளவிற்கே வரவேற்பு பெற்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் அவரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வருவார் எனத் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in