மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழில் 'பாய்ஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமான தமன், அதன் பின் நடிப்பதை விட்டு விட்டு முழு நேர இசையமைப்பாளராகி விட்டார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் தமன், அங்கு பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். வெற்றிகரமான இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். அதே சமயம் அதிகம் காப்பியடிக்கும் ஒரு இசையமைப்பாளர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். அவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் வெளிவந்தாலே போதும் உடனே ரசிகர்கள் அது எந்த ஆல்பத்தின் இசை, அல்லது வேறு எந்தப் படத்திலிருந்து சுட்டது என கமெண்ட்டுகளை அள்ளி வீசிக் கொண்டேயிருப்பார்கள். அதிலும் பல பழைய படங்களின் பாடல்களிலிருந்து டியூன்களை அப்படியே காப்பியடிப்பது தமனின் வழக்கம்.