'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
ராஜராஜேஸ்வரி, அரசி, சிவமயம் என பல சீரியல்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். அதேபோல் குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும் நடித்துள்ள அவர், ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தில் அவருக்கு பெரிதாக நடிக்க ஸ்கோப் இல்லாததால் அவரது நடிப்பு பேசப்படவில்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பாபநாசம் படத்தில் கமலின் மூத்த மகளாக நடித்துள்ளார் நிவேதா. கதையில் திருப்புமுனையாக ஏற்படுத்தக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என்பதால், கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார் நிவேதா. அதோடு படமும் வெற்றி பெற்றிருப்பதால் அவரது நடிப்பு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அதனால், இப்போதே அவரது நடிப்பை புகழ்ந்து பேசும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க அவரை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். ஆனால் நிவேதாவோ, தொடர்ந்து கேரக்டர் வேடங்களில் நடிக்கும் ஐடியா இல்லை. வெயிட்டான ஹீரோயின் வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். அதுவும் ஹோம்லியாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வருகிறார்.