பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
திருமுருகன் இயக்கிய மெட்டிஒலி டிவித்தொடரில் நடிகரானவர் போஸ் வெங்கட். இவரது நிஜப்பெயர் வெங்கட். அந்த சீரியலில் போஸ் என்கிற கேரக்டரில் நடித்ததால் பின்னர் அந்த பெயரையும் தனது பெயருடன் இணைத்துக்கொண்டார். அதன்பிறகும் சில தொடர்களில நடித்த போஸ் வெங்கட்டை, ஈரநிலம் படத்தில் சினிமாவுக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா. அவரது மோதிரக்கையில் குட்டுபட்ட அதிர்ஷ்டம் பின்னர் தலைநகரம், சிவாஜி, தாம்தூம் , சரோஜா, ராஜாதிராஜா, சிங்கம், தெனாலிராமன் என பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து தற்போது சினிமாவில் முக்கியமான கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகி விட்டார் போஸ் வெங்கட். இந்த நிலையில், அவரை சில டிவி சீரியல் டைரக்டர்களும் மீண்டும் சீரியல்களில நடிக்குமாறு கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். ஆனால் அவரோ, சினிமாவில் சாதாரணமான என்ட்ரி கிடைத்திருந்தால் டிவியை விட்டிருக்க மாட்டேன். ஆனால் பாரதிராஜாவே என்னை அறிமுகம் செய்ததால் அவர் பெயரை காப்பாற்றும் வகையில் நான் பெரிய நடிகராக வேண்டும். அதனால் சினிமாவில் வளர்ச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டேயிருக்கிறேன் என்று கூறும் போஸ் வெங்கட். ரஜினியின் சிவாஜி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்த பிறகுதான், சினிமாவில் நாமும் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு முழுசாக ஏற்பட்டது என்கிறார்.