ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் டி.ராஜேந்தர் ஜோதிடத்தில் மீது அபார நம்பிக்கை கொண்டவர். 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் ஜோதிடத்தை ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறார். மேலும், எந்தவொரு விசயமாக இருந்தாலும் நல்லநேரம் பார்த்தே பக்காவாக செய்யக்கூடியவர். அதோடு எங்காவது வெளியில் செல்லும்போது மூன்று பேராக செல்ல நேர்ந்தால், நான்காவது ஒருத்தருக்காக ஒரு சிறிய கல்லை எடுத்து காருக்குள் போட்டுக்கொண்டு செல்வார். அந்த அளவுக்கு அவர் ஜோதிடத்தை முழுசாக நம்பக்கூடியவர். அந்த வகையில், தான் இப்போது ஹீரோவாக நடித்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்பதினால்தான் இயக்கி நடிப்பதை தள்ளி வைத்திருக்கிறாராம். மேலும், சிம்பு நடித்த படங்கள் கடந்த 3 ஆண்டுகளாக திரைக்கு வராமல் இருப்பதற்கு கிரகநிலை சரியில்லாததுதான் காரணமாம். ஆனபோதும், அதெல்லாமே இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு சரியாகி விடுமாம். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றிகளை பெறுமாம். இந்நிலையில், கிரக தோஷங்களை கழிப்பதற்காக சமீபத்தில் சிம்புவுக்கு ஒரு பெரிய பரிகார பூஜையும் நடத்தப்பட்டுள்ளதாம்.