ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராதாபாரதி இயக்கிய வைதேகி வந்தாச்சு என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சரவணன். அதன்பிறகு பொண்டாட்டி ராஜ்ஜியம், மாமியார் வீடு, தாய்மனசு, செவத்தப்பொண்ணு என பல படங்களில் நாயகனாக நடித்தார். ஒருகட்டத்தில் அவரது ஹீரோ மார்க்கெட் முற்றிலுமாக கவிழ்ந்து போனது.
அதனால் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக என்ட்ரி ஆனார் சரவணன். அதிலிருந்து பருத்தி வீரன் சர வணன் என்று அழைக்கப்பட்டு வரும் அவர், விலை, அறியான், கவசம் என பல படங்களில் நடித்தவர், இப்போது மதுரை ஜில்லா என்ற படத்தில் அதிரடியான வில்லனாக நடிக்கவிருக்கிறார்.
மதுரை மண்வாசனைக்கதையில் உருவான பருத்தி வீரன் படம் அவருக்கு ரீஎன்ட்ரியில் திருப்புமுனை படமாக அமைந்ததால், மதுரை கதைக்களத்தில் வில்லனாக நடிக்கும் இந்த படம் தனக்கு பெரிய திருப்பத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கும் சரவணன், சண்டை காட்சிகளிலும் நடிக்கயிருப்பதால் தனது உடல் எடையை கணிசமான அளவு ஜிம்முக்கு சென்று குறைத்து வருகிறார்.