வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
ரஞ்சித் இயக்கத்திலான படத்திற்காக, ரஜினிகாந்த், படக்காட்சிகள் குறித்த ரிகர்சலில் பங்கேற்றதாக வந்துள்ள தகவல், கோலிவுட்டில் பெரும் சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை, கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படப்பணிகளில், ரஞ்சித் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அட்டகத்தி படத்தின் மூலம், இயக்குநர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் பா.ரஞ்சித், கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். முதல்படம் வெற்றிப்படமாக அமையவே, அடுத்ததாக, கார்த்தி நடிப்பில், மெட்ராஸ் படத்தை இயக்கினார். அப்படமும், ரஞ்சித்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது.
லிங்கா படம் ஏற்படுத்திய தோல்வியின் காரணமாக, புதுமுக இயக்குநரின் படத்தில் நடிப்பதன் மூலமே, தமிழ்த்திரையுலகில் மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க முடியும் என்று ரஜினி நினைத்திருந்த நிலையில், ரஞ்சித்தின் படங்கள், ரஜினிக்கு புலப்பட்டன. பின் ரஜினி - ரஞ்சித் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. பின் சமீபத்தில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை, கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இயக்குநர் ரஞ்சித், பட துவக்கத்திற்கு முன்பே, அதுகுறித்த காட்சிகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதற்காக வொர்க்ஷாப்களை நடத்துவது வழக்கம். இந்த வொர்க்ஷாப்களில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு ரிகர்சலில் ஈடுபடுவர். அதுபோலவே, ரஜினி நடிக்க உள்ள பெயரிடப்படாத புதுப்படத்திற்காகவும், வொர்க்ஷாப்பை உருவாக்கி, படக்குழுவினர் ரிகர்சலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வொர்க்ஷாப்பில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று ரஞ்சித், ரஜினியிடம் கேட்டுக்கொண்டிருந்தநிலையில், அதற்கு பதிலளித்திராத ரஜினி, திடீரென்று, அந்த வொர்க்ஷாப்பில் கலந்துகொண்டார். தனது சம்பந்தப்பட்ட காட்சிகளின் ரிகர்சலிலும் ரஜினி பங்கேற்றதாக, படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.