ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதினின் வாழ்க்கையை மையமாக வைத்து அசார் என்ற பெயரில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இதில் அசாரூதினாக இம்ரான் ஹாஸ்மி நடிக்கிறார். இப்படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள் என்பது பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. அதில் அசாரூதினின் முதல்மனைவியாக பிராச்சி தேசாய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தற்போது அவரது இரண்டாவது மனைவியான சங்கீதா ரோலில், நர்கிஸ் பக்ரி நடிக்க முடிவாகியுள்ளார். முன்னதாக இந்த ரோலில் நடிக்க கரீனா கபூர், ஜாக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. அவர்களிடமும் இதுப்பற்றி படக்குழு பேசியுள்ளது. ஆனால் தங்களுக்கு விருப்பம் இல்லை என இருவரும் கூறிவிட்டனர். இதனையடுத்து தான் நர்கிஸிடம் கேட்டுள்ளனர். அவரும் ஓ.கே., சொல்ல சமீபத்தில் போட்டோ ஷூட்டெல்லாம் நடத்தியுள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தமாதம் துவங்க இருக்கிறது.