ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எல்லா நடிககைளும் வளர்ந்தபின் பிரபலமாகிவிட்டால் புதுமுக நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடிப்பதில்லை. ஆனால் இவர்களில் விதிவிலக்கு ஓவியா எனலாம். பல புதுமுக நடிகர்களுடன் பெருந்தன்மையாக ஜோடி சேர்ந்து நடித்து அவர்களை உயர்த்த உதவுகிறார். மலையாளத்தில் 3 படங்கள் நடித்த நிலையில் தமிழில் களவாணியில் புதுமுக விமலுடன் ஜோடியாக நடித்தார். மெரினாவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார். இன்று அவர் வளர்ந்து எங்கோ சென்று விட்டார்.
முத்துக்கு முத்தாக படத்தில் ஹரீஷுடன் நடித்தவர், கலகலப்பு படத்தில் சிவாவுடன் ஜோடியானார். மூடர் கூடம் படத்தில் நவீனுடன் ,மதயானைக் கூட்டத்தில் கதிருடன் என்று புதிய வளரும் நாயகர்களுடன் நடித்துள்ளார். அந்த வகையில் ஓவியா பல இளம் கதாநாயகர்களுக்கு கை கொடுத்து உயர்த்திவிடும் ஆபத் பாந்தவியாக இருக்கிறார் என்றே கூற வேண்டும். இளம் ஹீரோக்களுக்கு கை கொடுக்கும் ஓவியா என்று சீனி பட விழாவின் மேடையிலேயே இவரைப் புகழ்ந்தார்கள் என்றால் பாருங்களேன்..