'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார். நிதின் பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபத்தில் துவங்கி பேங்காங், தாய்லாந்த் போன்ற நாடுகளில் நடைபெற்றன. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடைபெற்றன. அகில் பங்கேற்ற அதிரடி சண்டைக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளன. தற்போது தாய்லாந்த் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. விரைவில் படக்குழுவினர் ஹைதராபாத் திரும்பவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் 70% நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெறும் எனவும் படப் பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.