தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொதுவாக ஒரு படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது என்றால் வியாழக்கிழமை இரவு தான் அந்தப்படத்தின் போஸ்டர்கள் ஓட்டப்படுவது வழக்கம். ஆனால் சமீபகாலமாக புதன் கிழமை இரவே போஸ்டர்களை ஓட்டிவிடுவதால் வியாழக்கிழமை தினத்தன்று 'இன்றுமுதல்' என்கிற வாசகத்துடன் கூடிய போஸ்டர் பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. இது ஒருபக்கம் இருக்க, ஒரு வாரம் ஓடும்போதே 1௦0வது நாள் போஸ்டரும் மூன்று வாரங்கள் ஆன நிலையில் 25வது நாள் போஸ்டரும் ஒட்டப்பட்டு அமர்க்களப்படுத்துகின்றன.
இதேபாணியை இப்போது 100வது நாள் கொண்டாட்டத்திலும் கொண்டு வந்துவிட்டார்கள். மம்முட்டி நடித்து, கடந்த ஏப்ரல்-15ஆம் தேதி வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படம்' இன்னும் சில தியேட்டர்களில் 100வது நாளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறதுதான். மறுக்கவில்லை. ஆனால் படம் வெளியாகி இன்று 80 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்தப்படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாடியிருப்பதுதான் ஆச்சர்யம் தருகிறது.
தான் தற்போது நடித்துவரும் 'உடோபியாயிலே ராஜாவு' படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டில் வைத்து மம்முட்டியே இதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதுமட்டுமல்ல படத்தின் 100வது நாள் போஸ்டர்களும் கேரள நகரங்களில் பெருமளவில் ஓட்டப்பட்டுள்ளன. படம் எப்படியும் 100வது நாளை தொடத்தான் போகிறது. அதற்குள் மம்முட்டி அவசரமாக இப்படி 10௦0வது நாள் கொண்டாடுவது சரியா என்கிறார்கள் திரையுலகில் உள்ள மற்றவர்கள். ஆனால் நீண்ட நாட்கள் கழித்து மம்முட்டியின் படம் 100வது நாளை தொடப்போவதால் அதை இப்போதிருந்தே கொண்டாடுகிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.