ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண், வெற்றி பட இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான திரைக்கதை எழுதி வரும் திரிவிக்ரம் பாடகி சுனிதாவை சந்தித்து இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் குறித்தும் அதில் சுனிதா நடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். திரிவிக்ரம் கூறிய கதை பிடித்துப் போகவே சுனிதாவும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. பவன் கல்யாணுக்கு அத்தையாக சுனிதா நடிப்பதாகவும் கூறப்படுகின்றது.பவன் கல்யாண் தற்போது கபார் சிங் 2 படத்தில் நடிக்க தயாராகி வருகின்றார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. இயக்குநர் பாபி இயக்கும் இப்படத்தை நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் பட நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தை முடித்த பின்னர் பவன் கல்யாண் திரிவிக்ரம் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.