‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
டோலிவுட்டில் உருவாகி வரும் சரித்திர திரைப்படமான பாகுபலி படம் ஜூலை 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. பிரமிக்க வைக்கும் வகையில் வெளிவந்த இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் இந்திய திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் இப்படம் திரைக்கு வருகின்றது. எனவே ஹைதராபாத், சென்னை, கொச்சின், மும்பை போன்ற நகரங்களில் படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது பிரபாஸிடம் தாங்கள் எந்த பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைபடுகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரபாஸ் தான் நடிகை தீபிகா படுகோனேவுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் பாலிவுட் இயக்குநர் ராஜு ஹிரானி படத்தில் நாயகனாக நடிக்கவும் டோலிவுட் அதிரடி நாயகன் பிரபாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.