ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் மாஜி ஹீரோ சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா, சல்மான் கான் நடித்த தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். முதல்படமே சல்மான் எனும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தார். முதல்படமே அவருக்கு ஹிட்டாக அமைய, தபாங்-2விலும் மீண்டும் சல்மான் உடன் இணைந்தார். அதுவும் ஹிட்டானது. இப்போது தபாங்-3 படத்தை இயக்க இருக்கிறார். இதிலும் இந்த ஜோடி இணையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சோனாக்ஷி தனக்கு அதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இதுப்பற்றி சல்மானிடம் சமீபத்தில் கேட்டபோது, தபாங்-3 படத்திலும் சோனாக்ஷி நடிக்கிறார். தபாங் படத்தில் தான் அவர் அறிமுகமானார், அதன் பிறகு அவர் ஒரே இரவில் புகழ்பெற்றார், தாபங்-2விலும் அவர் நடித்தார். அதனால் நிச்சயமாக தபாங்-3யிலும் அவர் இருப்பார் என்றார்.