மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சூப்பர் படம் பாட்ஷா. இந்தப் படத்தை கிண்டல் செய்து (ஸ்பூஃப்) படம் எடுக்க விநியோகஸ்தர் சிங்காரவேலன் முடிவு செய்திருக்கிறார். லிங்கா பட விவகாரத்தில் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு தலைமையேற்று செயல்பட்டவர்தான் இந்த விநியோகஸ்தர். ரஜினி வீட்டு முன் போராட்டம், உண்ணாவிரதம் என பல விஷயங்களை நடத்தியவர். தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் கார்டு போடப்பட்டவர். அவர்தான் தற்போது பாட்ஷாவை கிண்டல் செய்து படம் எடுக்க இருக்கிறாராம்.
இதில் ரஜினியாக பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறாராம். வில்லன் ஆன்டனியாக ரகுவரன் நடித்த கேரக்டரில் மன்சூரலிகான் நடிக்கிறாராம். இதற்கான ஏற்பாடுகளை சிங்கார வேலன் செய்து வருவதாக கூறப்படுகிறது.