புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
சந்தானம் நம்பர்ஒன் காமெடியனாக இருந்தபோது முன்னணி ஹீரோக்களுடன் அதிக படங்களில் சூரியினால் நடிக்க முடியவில்லை. இருப்பினும் விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா போன்ற படங்களில் நடித்தார். ஆனால், தற்போது சந்தானம் ஹீரோவாகி விட்டதால் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு போதுமான காமெடியன் இல்லாத நிலை கோலிவுட்டில் ஏற்பட்டிருக்கிறது. மார்க்கெட்டில் பல காமெடியன்கள் இருந்தபோதும், முன்னணி ஹீரோக்கள் சூரிக்குத்தான் ரெகமண்டேசன் செய்கிறார்களாம். அதனால் இப்போது பத்து படங்களில் அவர் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் அஜித், விஜய், விஷால், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் என மேல்தட்டு ஹீரோக்களின் படங்களாக உள்ளன. அதனால், ஒரே நேரத்தில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதால் ஏற்கனவே தான் நடித்து வந்த இரண்டாம்தட்டு ஹீரோக்களின் படங்களில் நடிக்க முடியாத நிலையில் இருக்கிறார் சூரி. இதனால் அவர் கால்சீட் இல்லை என்று கைவிரித்த படங்களெல்லாம் நான் கடவுள் ராஜேந்திரன், தம்பி ராமைய்யா, சிங்கம்புலி உள்ளிட்ட காமெடியன்களுக்கு கிடைத்து வருகிறது.