பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கிய படம் காக்கா முட்டை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்ட இப்படம் சில விருது விழாக்களுக்கு அனுப்பப்பட்டதால் திரைக்கு வர தாமதமானது. எதிர்பார்த்தபடியே தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்று பின்னர் வெளியான காக்கா முட்டை ரசிகர்களாலும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றதால், இப்போது மணிகண்டன் முதல் படத்திலேயே முக்கியமான டைரக்டராகி விட்டார்.
காக்கா முட்டையை இயக்கி முடித்ததும் விதார்த் தயாரித்து நடித்துள்ள குற்றமும் தண்டனையும் என்ற படத்தை இயக்கிய மணிகண்டன், தற்போது தனுஷ் உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்களை அடுத்தடுத்து இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.