ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாடகசாலை என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் இனியா. அதையடுத்து மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் தங்கை வேடத்தில் நடித்தவர், சற்குணம் இயக்கிய வாகை சூடவா படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து பேசப்படும் நடிகையானார். பின்னர் மெளனகுரு, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒருநாள், மாசாணி என பல படங்களில் நடித்தார். தற்போதும், ஜித்தன்-2, வைகை எக்ஸ்பிரஸ் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிக்கிற படங்கள் பெரிதாக வெற்றி பெறாததால் அவருக்கு மிகக்குறைவான சம்பளத்தையே கொடுக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். அதனால் தற்போது சில காமெடி நடிகர்கள் போன்று நாள் சம்பளம் பேசத் தொடங்கியிருக்கிறார் இனியா. அதாவது, என்னை வைத்து ஒருநாளைக்கு எத்தனை சீன் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். இடைவேளை இன்றி நடித்துக்கொடுக்க நான் தயார். ஆனால், ஒரு நாளைக்கு எனக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுத்து விட வேண்டும் என்கிறாராம். இனியா வைக்கும் இந்த புதிய கண்டிசனை அவருக்கு படவாய்ப்பு வாங்கிக்கொடுக்கும் சினிமா மேனேஜர்கள் தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.