இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தினத்தில் யூனிட்டில் உள்ள அத்தனை பேருக்கும் ஏதாவது பரிசுப்பொருட்கள் கொடுப்பது நடிகர் பிரபுவின் வழக்கம். இந்தத் தலைமுறை நடிகர்களில் அஜித், விஜய் எப்போதாவது இப்படி சர்ப்ரைஸ் கொடுப்பார்கள். சமீபத்தில் சமந்தா விஐபி 2 படத்தின் கடைசிநாள் படப்பிடிபிப்பில் ஒவ்வொருவருக்கும் 2500 மதிப்புள்ள பரிசுப்பொருட்களை வழங்கினார்.
இந்த பட்டியலில் தற்போது நடிகர் விஷாலும் சேர்ந்திருக்கிறார். இந்த வருட பொங்கல் சமயத்தில் 'புலி' படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயங்களை பரிசாக வழங்கினார் விஜய். தற்போது நடிகர் விஷாலும் இதே பாணியில், 'பாயும் புலி' படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கியிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை முன்னிட்டு 300 தங்க நாணயங்களை டெக்னீஷியன்களுக்கு பரிசாக வழங்கினாராம் விஷால்.