இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு சேனலின் நிகழ்ச்சியை இன்னொரு சேனல் கிண்டல் செய்து ஒளிபரப்புவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஜீ தமிழ் சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று விஜய் டி.வி. செய்த கிண்டல் அதிரிபுதிரி ஹிட்டடித்து இன்றைக்கு ஒரு சினிமாவுக்கு டைட்டில் ஆகிற அளவிற்கும், டாப் ஹீரோ சூர்யாவே வசனமாக பேசுகிற அளவிற்கும் பாப்புலரானது.
தற்போது டி.வி. நிகழ்ச்சிகளை கிண்டல் செய்து, குறிப்பாக விஜய் டி.வி.நிகழ்ச்சிகளை கிண்டல் செய்து புதுயுகம் தொலைக்காட்சி இப்படி பண்றீங்களேம்மா என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இதில் விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர், யார் அடுத்த பிரபுதேவா, காபி வித் டிடி மாதிரியான நிகழ்ச்சிகளை கலாய்க்கிறார்கள். மானாட மயிலாட உள்பட பல சேனல் நிகழ்ச்சிகளையும் கிண்டல் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அரவிந்த்ராஜ், விக்னேஷ், சபரி தொகுத்து வழங்குகிறார்கள்.