ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
சிம்புவும், ஜெயப்பிரதாவின் மகன் சித்துவும் நண்பர்கள் மட்டுமல்ல எதிரெதிர் வீட்டுக்காரர்களும் கூட. இருவரும் சிறு வயது முதல் நண்பர்கள். மிகவும் கூச்சம், பயம், தயக்கம் என்று சாந்த சொரூபியாக இருந்த சித்துவை கலகலப்பு பேர்வழியாக மாற்றியதில் சிம்புவின் பங்கு உண்டாம். எந்த அளவுக்கு மாற்றினார் என்றால் திருட்டு தம்மடிக்குமளவுக்கு மாற்றினாராம். அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு அரட்டையடிப்பது, வெளியில் செல்வது என்றிருப்பார்களாம்.
ஒருவர் வீட்டில் பிரச்சினை என்றால் மதிலேறிக் குதித்து இன்னொருவர் வீட்டுக்கு போய் ஒளிந்து கொள்வதுண்டாம். கார் டிரைவிங்கிலும் அப்படி இருவருமே தங்கள் கார்களை மாற்றிக் கொண்டு பழகியதுண்டாம். ஜாலி, கிண்டல், கலாய்ப்பு என்று இருவரும் தொடங்கிவிட்டால் பொழுது போவதே தெரியாத அளவுக்கு கக்சேரி களை கட்டுமாம்.
கிரிக்கெட் விளையாட இருவரும் சேர்ந்து வெளியில் செல்வதுண்டாம். இப்படி சிம்புவும் சித்துவும் இரட்டை வாலுகள் போல ஜாலியாகத் திரிந்தவர்களாம். ஒருவர் பற்றி ஒருவர் ஆப்த தெக்கார்டு ரகசியங்கள் ஆயிரம் வைத்துள்ளார்களாம். அது சரி, சிம்புவின் அபிமான (!) நடிகை ஹன்சிகா சித்துவின் படத்தில் நடிக்கிறாரே இதில் சிம்புவுக்கு வருத்தம் இருக்காது தானே? உயிரே உயிரே படத்தின் ஆடியோ விழாவுக்குக் கூட சிம்பு வரவில்லையே ஏன்?