பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டோலிவுட்டின் வெற்றி பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் மாறுபட்ட கதைக்களம் கொண்ட ஜோதிலக்ஷ்மி படத்தை இயக்கி வெற்றி கண்டார். நடிகை சார்மி நடிப்பில் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கம் அடுத்த படமான லோபர் படத்தில் நடிகர் வருண் தேஜா நாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதம் 9 ஆம் தேதியிலிருந்து ஹைதராபாத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜோத்பூரில் ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடிகை திஷா நடிக்கவுள்ளார். மேலும் நடிகை ரேவதி, நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சுனில் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இப்படத்தை தயாரிப்பாளர் கல்யாண் தயாரிக்கின்றார்.