இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கோலிவுட்டில் பட வாய்ப்புகள் இல்லாததால் டோலிவுட் பக்கம் சென்ற நடிகை ரெஜினா, தற்போது அங்கு பல பட வாய்ப்புகளை பெற்று வருகின்றார். ரெஜினா நாயகியாக நடித்து வெளிவந்த 'ரா ரா கிருஷ்ணய்யா' படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. சுப்ரமணியம் பார் சேல் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரெஜினா, நடிகர் மஞ்சு விஷ்ணு நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் நடிகர் கோபிசந்த் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளாராம். நடிகர் ஜெயம் ரவிக்கு வெற்றி படமாக அமைந்த ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கோபிசந்த் பல தெலுங்கு படங்களில் நாயகனாக நடித்து வருகின்றார். இயக்குநர் ரவிக்குமார் சௌத்ரி இயக்கும் படத்தில் கோபிசந்த் நாயகனாக நடிக்கின்றார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கவுள்ளார். பிள்ளை நிவூ லெனி ஜீவிதம் எனும் வெற்றி படம் இயக்கிய ரவிக்குமார் அப்படத்தில் நடித்த ரெஜினாவை தனது அடுத்த படத்திற்கும் நாயகியாக தேர்வு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை 15 ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.