'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
தெலுங்கு திரை உலகில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் சுனில் தற்போது நாயகனாக நடித்து வருகின்றார். தற்போது நடிகர் சுனில் ஜோஷ் பட புகழ் இயக்குநர் வாசு வர்மா இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தைத் தொடர்ந்து சுனில் இயக்குநர் வம்சி கிருஷ்ணா அகேல்லா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் சுனிலுக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. அதில் ஹிந்தி நடிகை பிரச்சி தேசாய் இப்படத்தில் நாயகியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இயக்குநர் வாசு வர்மாவின் படத்தை முடித்த பின்னர் சுனில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது. பல ஹிந்தி படங்களில் நடித்துள்ள பிரச்சி தேசாய் தற்போது இயக்குநர் டோனி இயக்கும் அழர்படத்தில் நடித்து வருகின்றார். சுனிலுடன் இணைந்து தனது முதல் தெலுங்கு படத்தில் நடிக்க பிரச்சி தேசாய் முடிவு செய்துள்ளார்.