ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை; இருவருமே, யாருடன் ஜோடியாக நடித்தாலும், அவர்களை இணைத்து, கிசு கிசு எழுந்து விடுகிறது. இரண்டாம் உலகம் படத்துக்கு பின், ஆர்யாவும், அனுஷ்காவும்,இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இரண்டாம் உலகத்தில் நடிக்கும்போதே, இருவரும் காதலிப்பதாகவும், அனுஷ்காவுக்கு ஆர்யா, பிரியாணி விருந்து கொடுத்ததாகவும் கூறப்பட்டது. பின், அந்த கிசு கிசு அப்படியே அடங்கி விட்டது. தற்போது, மீண்டும் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளதை அடுத்து, மறுபடியும், இருவரையும் இணைத்து, தகவல்கள் பரவி வருகின்றன. இரண்டு பேரும் ரொம்ப நெருக்கமாகிட்டாங்களாமே என, கோடம்பாக்கத்தில் கிசு கிசு ரவுண்டு கட்டி அடிக்கிறது. ஆர்யாவுக்கு, தீவிரமாக பெண் பார்த்து வரும் அவரின் பெற்றோரும், அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை பார்த்து வரும் அவரின் பெற்றோரும், இந்த தகவலால்
கவலையில் ஆழ்ந்துள்ளனர்.