வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஷார்மி நடித்த தெலுங்கு படமான மந்த்ரா அங்கு பெரும் வெற்றி பெற்றது. அந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு இங்கும் ஓரளவுக்கு வசூலித்தது. தற்போது மந்த்ரா படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. கருங்காலி படத்தில் நடித்த சீனிவாஸ் ஹீரோவாக நடிக்கிறார், ஷார்மியே இதிலும் மந்த்ராவாக நடிக்கிறார். எஸ்எஸ்எஸ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.சுந்தரம் தயாரிக்கிறார். தணிகலபரணி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சுனில் காஷ்யப் இசை அமைக்கிறார் ராஜஜேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.வி.சதீஷ் இயக்குகிறார்.
"சொத்துக்காக ஆசைப்பட்டு அண்ணன் குடும்பத்தையே கொலை செய்கிறான் தம்பி. அதிலிருந்து தப்பித்து விடுகிற சார்மியின் உடலில் அவளது அப்பாவின் ஆவி புகுந்து கொண்டு அவளை காப்பாற்றுவதுடன் அந்த அக்கிரமங்களுக்குக் காரணமான தம்பியை எப்படி பழி வாங்குகிறது என்பதே மந்த்ரா - 2வின் கதை திகில் கலந்த பேய்க்கதையாகவும் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது" என்கிறார் இயக்குனர் எஸ்.வி.சதீஷ்