தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை த்ரிஷாவின் நெருங்கிய நண்பர் என்ற வகையில் அறியப்பட்ட தெலுங்கு நடிகர் ராணா பின்னர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் நண்பராக ஆரம்பம் படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவர் பல தெலுங்கு படங்களில் நடிகர், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது பாகுபலி,ருத்ரமாதேவி போன்ற படங்கள் திரைக்கு வரவுள்ளன. இந்நிலையில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் நடிகர் ராணாவை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது. டோலிவுட்டில் நடிகர் நாகார்ஜுனா, நடிகர் மகேஷ் பாபுவிற்கு அடுத்தபடியாக நடிகர் ராணாவை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது குறித்து ராணா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.பாகுபலி படத்திலிருந்து வெளிவந்த ராணாவின் புகைப்படங்களும், முன்னோட்ட காட்சிகளுமே ராணாவிற்கு அதிக ரசிகர்கள் கிடைக்க காரணம் என டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.