ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் திருமணம், ஜூலை 7ம் தேதி நடைபெற இருக்கிறது. ஷாகித் கபூரும், கரீனா கபூரும் ஒருகாலத்தில் காதலர்களாக வலம் வந்தவர்கள். அதன்பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். கரீனா, சைப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஷாகித், டில்லியை சேர்ந்த மீரா ராஜ்புட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். நீண்டநாட்களாக ரகசியமாக இருந்த காதல் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. அதோடு ஷாகித்தும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்தன. இப்போது ஷாகித்தின் திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூலை 7ம் தேதி, குர்கானில் திருமணம் நடைபெற இருக்கிறது. மிகவும் எளிமையாக நடைபெற இருக்கும் இந்த திருமணத்தில், ஷாகித் கபூர் மற்றும் மீரா குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள், உறவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர். ஜூலை 12ம் தேதி மும்பையில் பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது.