தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். இவர் விழா படத்தின் மூலம் ஹீரோவானார். அது வித்தியாசமான படம் என்றபோதும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதையடுத்து, என்றுமே ஆனந்தம், விந்தை போன்ற படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து விரைவில் இசை என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார். பிரபாகரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ராம் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் உதவி இயக்குனர் வேடத்தில் நடித்துள்ளார் மகேந்திரன். படம் இயக்குவதற்காக அவர் என்னென்ன போராட்டங்களை சந்திக்கிறார் என்பதுதான் இந்த விரைவில் இசை படத்தின் கதை. அதேபோல் இப்படத்தில் பிரபல நடிகர் ஜெயசங்கரின் மகன் சஞ்சய் சங்கரும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். காமெடி கலந்த அந்த வேடம் தனக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு என்ட்ரியாக அமையும் என்று அவர் இந்த படத்தை பெரிதாக எதிர்பார்த்துககொண்டிருக்கிறார். மேலும், சமீபத்தில் தணிக்கைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட விரைவில் இசை படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாம். அதையடுத்து, படத்தை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு வியாபாரம் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.