மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஜெயப்பிரதாவின் தயாரிப்பில் உருவாகும் படம் உயிரே உயிரே, இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் ஜெயப்பிரதாவின் மகன் சித்துவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். படப்பிடிபில் ஹன்சிகா கொடுத்த ஒத்துழைப்பைப் பார்த்து படக்குழுவே வியந்து பாராட்டுகிறார்களாம். படத்தில் நடிக்கும் நாயகன் சித்து ஒரு புதுமுகம், எனவே காட்சிகளில் குறிப்பாக காதல் காட்சிகளில் நடிக்கும் போது ரொம்பவே கூச்சப் பட்டாராம். இதனால் காட்சிகளை மறுபடி மறுபடி எடுக்க வேண்டியிருந்தபோது பல முறை ரீடேக் எடுக்க வேண்டியிருந்ததாம். இப்படி பல காட்சிகளை ரீடேக் எடுத்தார்களாம்.
ஒரு காட்சியை பத்து முறை கூட எடுத்தார்களாம் அப்போதும் கூட ஹன்சிகா முகம் சுழிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தாராம். இவ்வளவு முறை எடுக்க வேண்டியிருந்ததே என்று இயக்குநர் தரப்பில் சங்கடப்பபட்ட போது இப்படி புதுமுகம் நடிக்கும் போது அவர்களுக்கு இப்படி ஒரு பதற்றம் இருப்பது சகஜம்தான். அதை நான் புரிந்து கொள்கிறேன். உதயநிதியும் என்னுடன் நடிக்கும் போது புதுமுகம்தான். அப்போதும் அதை உணர்ந்திருக்கிறேன். ஏன் நானும் ஒரு காலத்தில் புதுமுகம்தானே? எனவே நோ ப்ராப்ளம் " என்றாராம் ஹன்சிகா. இப்படி ஒரு நடிகையா என உயிரே உயிரே படக்குழுவினர் புகழ்கிறார்கள்.