ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரின் நூற்றாண்டு விழா மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 98ம் பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நடந்த மருத்துவ முகாமை தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் ராதாரவி தொடங்கி வைத்தார்.
மாலையில் நூற்றாண்டு விழா லக்ஷ்மண் ஸ்ருதி இசை கச்சேரியுடன் தொடங்கியது. எம்.ஜி.ஆர் நடித்த தேவர் பிலிம்ஸ் பட பாடல்கள் இசைக்கப்பட்டது. சாண்டோ சின்னப்ப தேவர் சிலம்பாட்ட வீரர் என்பதால மதுரை மாடக்குளத்திலிருந்து வந்திருந்த சிலம்ப வீரர்கள் சிலம்பாட்டத்தை நடத்திக் காட்டினார்கள்.
விழாவில் சாண்டோ சின்னப்ப தேவரின் மகன் சி.டி.தண்டபாணி, மகள்கள் சுப்புலட்சுமி, ஜெகதீஸ்வரி, மருமகன்கள் இயக்குனர் ஆர்.தியாகராஜன், பாலசுந்தரம், தேவர் படங்களுக்கு வசனம் எழுதிய ஆர்.கே.சண்முகம் ஆகியோரை நடிகர் சிவகுமார் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
விழாவில் இயக்குனர்கள் பி.வாசு, கே.நட்ராஜ், ராமதாஸ் நடிகர்கள் ராஜேஷ், எஸ்.வி.சேகர், குண்டு கல்யாணம், மயில்சாமி, நடிகை சாவித்ரி மகள் விஜயசாமுண்டீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இதயக்கனி விஜயன், எம்.ஜி.ஆர் மனிதநேய மன்றம், இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு, கலைவேந்தன் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து செய்திருந்தன.