ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த சில வாரங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' மலையாளத்திற்கு மட்டுமின்றி அனமது தமிழ்சினிமாவுக்கும் மூன்று ஹீரோயின்களை தந்துள்ளது. இதில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்த மூன்று ஹீரோயின்களில் சாய் பல்லவி சூப்பர் ஹிட், மடோனா செபாஸ்டின் ஹிட், அனுபமா பரமேஸ்வரன் மீடியம் ஹிட் என்கிற ரேஞ்சில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். இதில் மடோனா செபாஸ்டின் இப்போது தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பதுதான் ஸ்பெஷல் நியூஸ்.
பிரேமம் படம் தான் அவரது முதல் படம். ஆனால் அது ரிலீசாவதற்கு முன் இவர் எப்படி விஜய்சேதுபதியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்றால் அதற்கும் ஒரு சுவராஸ்யமான பின்னணி இருக்கிறது. தற்போது விஜய்சேதுபதி படத்தை இயக்கிவரும் நலன் குமாரசாமியும், 'பிரேமம்' படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்தரனும் குறும்படம் இயக்கிய காலத்தில் இருந்தே நண்பர்கள்.