நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடிக்கும் புலி படத்தை விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்னறனர். கடந்த 21 ஆம் தேதி மதியம் புலி படத்தின் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. புலி படத்தின் டீஸர் வெளியானது முதலே விஜய் ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர். அவர்களின் ஆதரவில் டீஸரும் பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
புலி படத்தின் டீஸர் வெளியான 8 நாட்களில் இதுவரை 45 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதை பார்வையிடப்பட்டுள்ளனர். விஜய் படங்களிலேயே இதுதான் அதிகபட்சம். தென்னிந்திய அளவில் வெளியான படங்களின் டீஸர் மற்றும் டிரைலர்களுக்கு கிடைத்த லைக்குகளில் 3ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது புலி டீஸர்.
இப்படியாக புலி டீஸர் ஒருபுறம் சாதனையைச் செய்தாலும், இன்னொருபுறம் சோதனையையும் சந்தித்து வருக்கிறது. அதிக லைக்குகளைப் பெற்றதோடு அல்லாமல், அதிக டிஸ்லைக்குகளையும் பெற்றிருக்கிறது புலி டீஸர். முதல்முறையாக 10,000 டிஸ்லைக்குகளைப் பெற்றுள்ளது புலி படத்தின் டீஸர். இப்படி ஒரு சோதனைக்கு புலி டீஸர் உள்ளாக யார் காரணம் என்று சொல்லவும் வேண்டுமா?