'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து வசூலை வாரிக் குவித்த S/O சத்யமூர்த்தி படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை 19 ஆம் தேதி பூஜையுடன் துவங்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. ராகுல் ப்ரீத்தி சிங், ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து கலந்து கொள்ளவுள்ளார். அப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விட்டு ராகுல் ப்ரீத்தி சிங், அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.அல்லு அர்ஜுன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரமாதேவி எனும் வரலாற்று திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.