தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகமாகி பின்னர், பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர் ரித்விகா. கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் படத்தில் ரித்விகாவின் யதார்த்த நடிப்பு அப்போதே பேசப்பட்டது. எந்தவிதமான மேக்அப்பும் இல்லாமல், முழுப்படத்திலும் நைட்டியிலேயே தோன்றினார் ரித்விகா. அவரது நடிப்புக்கு ஊடகங்களின் விமர்சனங்களில் மிகப்பெரிய பாராட்டு கிடைத்தன. அடுத்த கட்டமாக தன் யதார்த்த நடிப்புக்கு விருதையும் பெற்றிருக்கிறார் ரித்விகா.
சமீபத்தில் நடைபெற்ற 62ஆவது ஃபிலிம்ஃபேர் விருதுவிழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது மெட்ராஸ் படத்திற்காகப் ரித்விகாவுக்கு வழங்கப்பட்டது. மெட்ராஸ் படத்துக்குப் பிறகு தற்போது அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு நாள் கூத்து படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரித்விகா. இதிலும் அவருக்கு குணச்சித்திர வேடம்தான். இப்படத்தில் ரேடியோ ஜாக்கியாக (ஆர்ஜே) நடிக்கும் ரித்விகா, இதற்காக சென்னையிலுள்ள பிரபல எஃப்.எம். ரேடியோ ஸ்டேஷனுக்குச் சென்று அங்கு நடப்பத்தை நேரில் பார்த்து வந்ததாம். மெட்ராஸ் படத்தைப் போலவே ஒரு நாள் கூத்து படத்தில் ஏற்றுள்ள ஆர்ஜே கேரக்டருக்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்கிறார் ரித்விகா.