இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'ஷி டாக்ஸி' படம் சரியாக போகாதது மிகுந்த ஏமாற்றம் தான். இத்தனைக்கும் அந்தப்படத்தில் டாக்ஸி ட்ரைவராக எல்லாம் மாறி படம் முழுக்க சிரமப்பட்டு நடித்திருந்தார். ஆனால் பலன் ஜீரோ தான். இப்போது அதையெல்லாம் தூக்கி வைத்துவிட்டு அடுத்ததாக ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கும் புதிய படத்திற்கு தயாராகிவிட்டார் காவ்யா. சலு ஜார்ஜ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டில் துவங்குகிறது.
இந்தப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இது திகிலும் மர்மமும் கலந்த மெடிக்கல் த்ரில்லராக உருவாக இருக்கிறது. மருத்துவ துறையில் நிகழும் ஓர் ஆச்சர்யமான நிகழ்வையும் அதனை ஒட்டி நடக்கும் பிரச்னைகளையும் மையப்படுத்தி தான் இதன் கதை பின்னப்பட்டிருக்கிறதாம். படத்தின் பெரும்பகுதியை சஸ்பென்சும், விசாரணையும் தான் ஆக்கிரமிப்பு செய்யுமாம். காவ்யா மாதவனுக்கு இதில் மிகவும் போல்டான கேரக்டர் என்பதைத்தவிர மற்ற விஷயங்கள் பற்றி இப்போதே சொல்ல தயங்குகிறார் இயக்குனர் சலு ஜார்ஜ்.