ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாஜி நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷின் கைவசம் தற்போது இது என்ன மாயம், பாம்பு சட்டை, ரஜினிமுருகன், கவலை வேண்டாம் ஆகிய படங்களில் நடித்த வருகிறார். இதுதவிர பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார். ஆக, தமிழில் நடித்த முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகைகளுக்கெல்லாம் பலத்த அதிர்ச்சி கொடுத்து விட்டார் கீர்த்தி சுரேஷ். மேலும், அடுத்தபடியாக மேல்தட்டு ஹீரோக்களுடனும் நடித்து விட வேண்டும் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறார் அவர்.
அதேசமயம், சில நடிகைகளைப்போன்று முன்னணி நடிகர்களின் படவாய்ப்பு என்றால் கதைக்கேற்ப கவர்ச்சியாக நடிப்பேன் என்று அவர் தனது கண்டிசனை தளர்த்திக்கொள்ளவில்லை. முன்னணி ஹீரோக்களின் படம் என்றாலும், கிளாமராக நடிக்க மாட்டேன். இந்த விசயத்தைப்பொறுத்தவரை மாற்றி பேசும் பழக்கமெல்லாம் இல்லை. முதலில் சொன்னதுதான் இறுதிவரை. மாடர்ன் டிரஸ் அணிந்து நடிப்பேன். அதுதான் எனது கவர்ச்சி எல்லை. அதை தாண்டி கிளாமராக நடிக்கும் ஐடியா எதுவும் இல்லை என்கிறார். கீர்த்தி சுரேஷ் இப்படியொரு கண்டிசனை உறுதியாக முன் வைத்தபோதும், அவருக்கு அடுத்தடுத்து படங்கள் புக்காக்கி வருவது பலருக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.