இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்த வாரம் ஏழு படங்கள் வருவதாக சொல்லப்பட்டது. மிருகம் ஆதியின் நடிப்பில், ஆதியின் அண்ணன் இயக்கியிருக்கும் யாகவாராயினும் நா காக்க, கருணாஸ் கதாநாயகனாக நடித்து, ரஜனீஷ் இயக்கியுள்ள- லொடுக்கு பாண்டி, விமல், புன்னகைப்பூ கீதா ஜோடியாக நடித்துள்ள காவல், விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடித்துள்ள இன்று நேற்று நாளை, பெ.மோகன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள - ஒரு தோழன் ஒரு தோழி, கோபு பாலாஜி இயக்கத்தில் சாரதி, அன்சிபா நடித்துள்ள - பரஞ்சோதி, எஸ்.பி.சரண் தயாரிப்பில், மதுமிதா இயக்கியுள்ள - மூணே மூணு வார்த்தை ஆகிய ஏழு படங்கள்தான் அவை. இவற்றில் ஐந்து படங்கள் திட்டமிட்டபடி வெளியாகிவிட்டன. புதுமுகங்கள் நடித்த ஒரு தோழன் ஒரு தோழி, பரஞ்சோதி ஆகிய இரண்டு படங்கள் மட்டும் கடந்த வாரம் வெளிவரவில்லை. இவ்விரு படங்களில் பரஞ்சோதி படம் ஜூலை 3 ஆம் தேதியும், ஒரு தோழன் ஒரு தோழி ஜூலை கடைசிவாரத்துக்கும் தள்ளி வைக்கப்பட்டன. திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்ற நம்பிக்கையில் ஒரு தோழன் ஒரு தோழி, பரஞ்சோதி படங்களை ரிலீஸுக்கு சில நாட்கள் முன்னதாகவே அதாவது கடந்த வாரம் திங்கள், செவ்வாய் கிழமைகளிலேயே பத்திரிகையாளர்களுக்குப் போட்டுக்காட்டினார்கள். சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமானமுறையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு தோழன் ஒரு தோழி படம் பத்திரிகையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதை அறிந்த முன்னணி விநியோகஸ்தரான மதுரை அன்பு ஒரு தோழன் ஒரு தோழி படத்தை தமிழகம் முழுக்க வெளியிட முன் வந்துள்ளார். வாங்க ஆள் இல்லாமல் கிடந்த மைனா படத்தை ரெட்ஜெயண்ட் மூவீஸ் வாங்கி வெளியிட்டதும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.