ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
படத்தொகுப்பாளர்கள் இயக்குநராவது புதிய விஷயமில்லை. கடந்த காலங்களில் பல படத்தொகுப்பாளர்கள் இயக்குநர்களாகி இருக்கிறார்கள். எடிட்டர் பி.லெனின் நாக்அவுட், ஊருக்கு 100பேர் போன்ற படங்களுக்காக தேசிய விருதுகளையே வென்றுள்ளார். இந்த வரிசையில், தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி எடிட்டர்களில் ஒருவரான ஆண்டனியும் சேருகிறார். இயக்குனர் விஜய் வழங்க, ஏ.எல்.அழகப்பன் மற்றும் சாம் பால் தயாரிக்கும் படம் ஒன்றை முதல்முறையாக இயக்கி வருகிறார் ஆண்டனி.
சத்யராஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு 'நைட் ஷோ' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் லால், ஸ்ரீனிவாசன், சஜிதா ஆகியோர் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த படம் - 'ஷட்டர்'. இந்தப் படமே தமிழில் 'நைட் ஷோ'வாக ரீமேக்காகிறது. க்ரைம் த்ரில்லரான இப்படத்தை இயக்குவதோடு திரைக்கதையையும் ஆண்டனியே எழுதுகிறார். தவிர தனக்கு கை வந்த கலையான எடிட்டிங்கையும் ஆண்டனியே கவனிக்கிறார். 'நைட் ஷோ'வின் ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபு கவனிக்கிறார்.
ஜாய் மேத்யூ இசையமைக்கிறார். சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நைட்ஷோ படத்தின் டீஸர், பாடல்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன.