ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜோதிலக்ஷ்மி படத்தில் விலைமாதுவாக நடித்திருந்த நடிகை சார்மிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அப்படத்தின் வெற்றி சார்மிக்கு புதிய புத்துணர்ச்சியை தந்துள்ளதாக சார்மியின் நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர். ஜோதிலக்ஷ்மி படத்தில் விலைமாதுவாக அசத்திய சார்மி அடுத்து மந்த்ரா 2 படத்தில் பேயாக மிரட்ட வருகின்றார். பல ஆண்டுகளுக்கு முன்னர் சார்மி நடிப்பில் வெளிவந்த மந்த்ரா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள மந்த்ரா 2 படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் இயக்கியுள்ளார். பேய்கள் வசிக்கும் பண்ணை வீட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்படுள்ளதாம். இப்படத்தில் ரசிகர்களை நடுநடுங்க வைக்கும் வண்ணம் அதிபங்கரமான திகில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சுனில் இசையமைத்துள்ளார். தற்போது படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெறுகின்றது. இப்படம் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.